முகாமில் மருத்துவர் இளந்தமிழன், மருத்துவர் இளங்கோ, மருத்துவர் அனந்தஜோதி, மருத்துவர் கார்த்திக், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளவரசு, மருத்துவமில்லா மேற்பார்வையாளர் நரசிம்மராஜ் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
காது, மூக்கு, தொண்டை பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை, நுரையீரல் பரிசோதனை, சளி பரிசோதனை, கொலஸ்ட்ரால் அளவு, சிறுநீரகம், இருதயம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. குறைபாடு உடையவர்களை கண்டறிந்து, அவர்கள் தேவையான மருந்துகள் மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும், உயர் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு உரிய மருத்துவ பரிந்துரை வழங்கப்பட்டது.
முகாமில் திரளான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக