காவாப்பட்டி கிராமத்தில் ரூ.13.58 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலை கடை கட்டிட பணிக்கு பூமி பூஜை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 மார்ச், 2025

காவாப்பட்டி கிராமத்தில் ரூ.13.58 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலை கடை கட்டிட பணிக்கு பூமி பூஜை.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காவாப்பட்டி கிராமத்தில் புதிய நியாயவிலை கடை கட்டிட பணிக்காக 13.58 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூமி பூஜை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் மற்றும் பாலக்கோடு தொகுதி எம்.எல்.ஏ கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த நியாயவிலை கடை கட்டிட பணிகள் தொடங்கப்பட்டன.


பூமி பூஜை நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர் கோபால், நகர செயலாளர் ராஜா, எம்.ஜி.ஆர். ஒன்றிய மன்ற செயலாளர் சுப்ரமணி, பேரூராட்சி கவுன்சிலர் விமலன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.


காவாப்பட்டி கிராம பொதுமக்கள் பல ஆண்டுகளாக புதிய நியாயவிலை கடைக்காக கோரிக்கை விடுத்திருந்த நிலையில், சட்டமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13.58 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.


இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், காவாப்பட்டி ஊர் கவுண்டர், மந்திரி கவுண்டர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி பூமி பூஜை நிகழ்வை சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad