பாப்பாரப்பட்டியில் இலவச இருதய பரிசோதனை முகாம்; 300 பங்கேற்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 28 மார்ச், 2025

பாப்பாரப்பட்டியில் இலவச இருதய பரிசோதனை முகாம்; 300 பங்கேற்பு.


தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் இயேசு ராஜா பள்ளி வளாகத்தில் மை தருமபுரி NGO, V4U, NDSO இன்ஃபோசிஸ் பவுண்டேஷன், ஹார்ட்ஸ் ஃபார் ஹார்ட்ஸ் மற்றும் டாஸ்யா ஆகிய அமைப்புகளின் கூட்டாக இரண்டு நாள் இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் இருதய நோய்களுக்கான அடிப்படை மருத்துவ சோதனைகள், எக்கோகார்டியோகிராஃபி (எக்கோ) பரிசோதனைகள் மற்றும் தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சைக்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டன. சென்னை பொது சுகாதார மையத்தின் மருத்துவர் டாக்டர் ஸ்ரீமதி தலைமையில் மருத்துவக் குழுவினர் பங்கேற்று, பொதுமக்களுக்கு சோதனைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.


இந்த முகாமில் பாப்பாரப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 300 பேர் பயன்பெற்றனர். நிகழ்வின் இறுதியில், முகாமில் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை V4U அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்மை தருமபுரி நிறுவனத்தின் செயலாளர் தமிழ்செல்வன்சண்முகம்அருள்மணிகணேஷ்RRC ராமசாமி மற்றும் நாடக கலைஞர் சாரதி ஆகியோர் கௌரவித்தனர்.


மருத்துவர் ஸ்ரீமதி கூறியதாவது: "இருதய நோய்கள் குறைந்த செலவில் முன்கணிப்பு மற்றும் தடுப்பு முறைகள் மூலம் கட்டுப்படுத்தப்படலாம். கிராமப்புறங்களில் இத்தகைய முகாம்கள் முக்கியமானவை" என்று வலியுறுத்தினார்.


இந்த முயற்சியை தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் முழுவதும் இலவச மருத்துவ சேவைகளை விரிவுபடுத்தும் திட்டங்கள் உள்ளதாக அமைப்புகள் தெரிவித்துள்ளன. பொது சுகாதாரத் துறையில் கவனம் செலுத்தும் அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைகள், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மக்களின் ஆரோக்கிய விழிப்புணர்வை உயர்த்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad