தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியத்தின் ஜம்மணஅள்ளி ஊராட்சி துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், சத்துணவு பணியாளர்கள் மற்றும் கிராமத்து மக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
வட்டார கல்வி அலுவலர் திருமதி உமாதேவி மற்றும் கால்நடை மருத்துவர் திரு. ஜான் விவிலியன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, கல்வி-சமூக ஒருங்கிணைப்பு, ஆரோக்கியம் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் கூட்டுறவின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினர். மாணவர்களின் நடனம், பாடல் மற்றும் நாடக நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன. பள்ளியின் கல்வி முன்னேற்றம் குறித்து ஆசிரியர்கள் அறிக்கை வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக