தர்மபுரி, மார்ச் 26 – தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்தில் உள்ள நவலை ஊராட்சியைச் சேர்ந்த சின்னகவுண்டம்பட்டி கிராமத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர், மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதற்காக பள்ளியில் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, திருக்குறள் ஒப்பித்தல், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் திருமதி. பொன்னி, வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பேனா, தேர்வு அட்டை, வாய்ப்பாடு புத்தகம், பென்சில், பெட்டி ஆகிய கல்வி உபகரணங்களையும், பரிசு பொருட்களையும் வழங்கினார். இந்த நிகழ்வில் கொசு ஒழிப்பு பணியாளர் திரு. மகேஷ் குமார், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்ற தோழர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

