Type Here to Get Search Results !

வாழைத்தோட்டத்தில் திமுக சார்பில்1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

 

வாழைத்தோட்டம் கிராமத்தில் 1000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் – திமுக மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன் தலைமையில் விழா


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்தின் வாழைத்தோட்டம் கிராமத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திமுக மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன் தலைமையில் நடைபெற்றது.


நிகழ்ச்சியில் பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, மாவட்ட பொருளாளர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் வக்கில் சந்திரசேகர், அரசு வழக்கறிஞர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


சிறப்பு விருந்தினராக தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் கலந்து கொண்டு 1000 பொதுமக்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கினார். மேலும், தமிழக அரசின் முக்கிய திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். அதில், மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், லேப்டாப் வழங்கும் திட்டம் ஆகியவை முக்கியமாக இடம்பெற்றன.


இதில், அவைத் தலைவர் ராஜாமணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜபாட்ரங்கதுரை, முன்னாள் கவுன்சிலர் முத்துசாமி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் நாகராஜன், மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் குமரன், உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies