தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் திமுக சார்பில் ரமலான் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 29 மார்ச், 2025

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் திமுக சார்பில் ரமலான் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு திமுக சார்பில் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூர் கழக செயலாளர் மற்றும் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்கள் கலந்து கொண்டு, பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள மைதீன்நகர், பனாரஸ்தெரு, புது பட்டாணியர் தெரு, அப்துல் கரீம் தெரு, மியாசாகிப் தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 1200 இஸ்லாமிய குடும்பங்களுக்கு பிரியாணி அரிசி அடங்கிய பரிசுத்தொகுப்புகளை வழங்கி, ரமலான் வாழ்த்து தெரிவித்தார்.


பாலக்கோடு பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநில விவசாய அணி துணைத் தலைவர் சூடப்பட்டி சுப்ரமணி, மாவட்ட பொருளாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன், வக்கில் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து பேசிய பழனியப்பன், வக்பு வாரிய சட்டம், குடியுரிமை சட்டம் மற்றும் அரசியல் ரீதியாக இஸ்லாமியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில், திமுக எப்போதும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதியளித்தார்.


நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றிய துணை செயலாளர் ரவி, மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஏ.வி.குமார், மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் குமரன், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் மோகன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சாதிக், ரூஹித், சரவணன், நிர்வாகிகள் மன்சூர் முகம்மதுஅலி உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad