பாலக்கோட்டில் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ குந்தியம்மன், ஸ்ரீ ஆறுபடை சக்திவேல்முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 29 மார்ச், 2025

பாலக்கோட்டில் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ குந்தியம்மன், ஸ்ரீ ஆறுபடை சக்திவேல்முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ குந்தியம்மன் மற்றும் ஸ்ரீ ஆறுபடை சக்திவேல்முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அமாவாசை நாளையொட்டி அதிகாலை முதலே சுவாமிக்கு பல்வேறு திரவியங்கள் மற்றும் பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


இந்த சிறப்பு நிகழ்வில் ஸ்ரீ குந்தியம்மனும், ஸ்ரீ ஆறுபடை சக்திவேல்முருகனும், அலங்கரிக்கப்பட்ட திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஆன்மிக உணர்வில் மூழ்கி வழிபட்டனர். விழாவை முன்னிட்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad