சி.எம்.புதூர் கிராம விவசாயிகளுக்கு புதிய பாதை – தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 மார்ச், 2025

சி.எம்.புதூர் கிராம விவசாயிகளுக்கு புதிய பாதை – தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுக்கா, மாரண்டஅள்ளி அருகே உள்ள சி.எம்.புதூர் கிராம விவசாயிகள், நீண்ட காலமாக பாதை வசதி இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்கள் விவசாய விளைபொருட்களை எடுத்துச் செல்லவும், டிராக்டர், விவசாய உபகரணங்களை கொண்டு செல்லவும், 2 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது.


இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண, உரிய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து கிராம மக்கள், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு மனு அளித்தனர். அதன் பேரில், வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பாதை வசதி இல்லாததைக் கண்டறிந்தனர். இதையடுத்து, 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நடைபாதை அமைத்து, விவசாய விளைபொருட்களை எளிதில் எடுத்துச் செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டது.


அதேபோல், ஊர் கோயில்கள் – முனியப்பன் கோவில், மாரியம்மன் கோவில், வீரபத்திர சாமி கோவில்களுக்கு செல்லும் வசதியும் ஏற்படுத்தப்பட்டது. 100 ஆண்டுகளாக பாதை வசதி இல்லாமல் தவித்த மக்களுக்கு தமிழக அரசு உதவியதற்காக, கிராம மக்கள் தமிழக முதல்வர் மற்றும் அரசிற்கு நன்றி தெரிவித்தனர்.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் இராஜபார்ட் ரங்கதுரை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஹரிபிரசாத், மாவட்ட பிரதிநிதி ஜெகன்நாதன், வாக்குச்சாவடி முகவர் பழனிச்சாமி, திருமலைவாசன், முனிராஜ், அர்த்தநாரி, முருகன், சிவன், சுப்பன் உள்ளிட்ட பொதுமக்கள், பெண்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad