தருமபுரி மாவட்ட 46வது ஆட்சியராக இன்று சதீஷ் பொறுப்பேற்றுக் கொண்டார் அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு கொடுத்தனர். அதைத் தொடர்ந்து முதல் கையெழுத்தை மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்டு தனது பணியை தொடங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தமிழக முதல்வர் போதையில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என தங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதற்கு முக்கியத்துவம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொடுக்கப்படும் எனவும் மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அரசு வழங்கும் அனைத்து திட்டங்களையும் அடித்தட்டு மக்களுக்கும் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து உதவிகளையும் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக