தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே நார்த்தம்பட்டி கிராமத்தில் ஞான நந்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயில் கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருக்கோயிலில் நேற்று குலதெய்வ வழிபாடு மங்கல வாத்தியம் கணபதி வேள்வி வழிபாடு, கோ பூஜை, கங்கணம் கட்டுதல், முலைப்பாரி அழைத்தல், சன்னியாசிகள் ஊர்வலம், துரெளபதி அம்மன், அம்மையப்பர், சுப்பிரமணி வள்ளி தெய்வானை நடராஜர் சிவகாம சுந்தரி அலங்கார நந்திதவம் ஈஸ்வரன் வரம் புத்தர் வழிபாடு முத்தமிழ் முதல்வனுக்கு வேள்வி வழிபாடு, திருமுறை விண்ணப்பம், எண் வகை மருந்து சாத்துதல் கைலாய வத்தியம் முழங்கிட, திருப்பள்ளி எழுச்சி, இரண்டாம் காலை பூஜை காவிரி புண்ணிய தீர்த்தம் கொண்டு வருதல் மல்லிங்கேஸ்வரர் சுவாமிக்கு கூலி எருது நேர்ந்து விடுதல், கேரளா மேளம், மங்கள இசை முழங்க சுந்தரி அலங்கார வீதி உலா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ரத்னா குரூப்ஸ் நிறுவனத் தலைவர் நிர்வாக இயக்குனர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மேலும் திருமுருகா கிருபானந்த வாரியார் சுவாமிகள் வள்ளி மலை ஆதினம் சன்னியாசிகள் இராமனந்த மகராஜ் உள்ளிட்டோர் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக