தர்மபுரி மாவட்டம் தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன் களப்பணியாளர்கள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு வழங்கப்பட்டது மனுவில் குறிப்பிட்டுள்ள தர்மபுரி மாவட்டத்தில் பேரூராட்சி மற்றும் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் குறைந்த ஊதியத்தில் பணி செய்து வருகின்றனர் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களில் மாறுபட்ட ஊதியத்தை வழங்குகின்றனர்.
அரூர், கடத்தூர், மொரப்பூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, தர்மபுரி, உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் வழங்கப்படுகிறது, பிற மாவட்டங்களில் சேலம், நாமக்கல், ஈரோடு, வழங்கப்படும் ஊதியத்தை போன்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொசு புழு ஒழிப்பு பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வை வழங்க வேண்டும், விலைவாசி உயர்வால் குழந்தைகள் படிப்பு செலவு, சங்க கடன், கல்லூரி படிப்பு மற்றும் மருத்துவ செலவிற்கும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
மாநிலத் தலைவர் ஜெயவேல், மாநில பொதுச் செயலாளர் சதீஷ், மாநிலத் துணைச் செயலாளர் நா. சின்னமணி, தர்மபுரி மாவட்ட தலைவர் பிரபாகரன், துணைத் தலைவர் மாது, செயலாளர் சந்திரன், மாரியப்பன், மாவட்ட பொருளாளர் ஆனந்தி மற்றும் அண்ணாமலை, செயற்குழு உறுப்பினர் மணிகண்டன், கடத்தூர் ஒன்றிய செயலாளர் வனிதா, அரூர் ஒன்றிய தலைவர் தென்னரசு, மணிமாறன், ஒன்றிய பொருளாளர் ராதாகிருஷ்ணன், கம்பைநல்லூர் பேரூராட்சி ஒன்றிய தலைவர் சத்யா, உள்ளிட்ட கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக