Type Here to Get Search Results !

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு கட்சியின் சின்னம் நிரந்தரமாக்கப்பட்டதை இனிப்பு வழங்கி கொண்டாடிய விசிக தொண்டர்கள்.


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் சின்னமான பானை சின்னத்தை நிரந்தர சின்னமாக தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, தமிழகம் முழுவதும்  விசிகவினர் பட்டாசு வெடித்தும்  இனிப்பு வழங்கியும்  கொண்டாடி வருகின்றனர்.


அதனை தொடர்ந்து, தர்மபுரி  மேற்கு மாவட்டம் மற்றும்   பாலக்கோடு சட்டமன்ற தொகுதியின் சார்பில்  பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு பானை சின்னம் நிரந்தரமாக்கப்பட்டது மற்றும் 75வது  குடியரசுதின பவள விழா கொண்டாட்டம், மாவட்டச் செயலளர் பொறியாளர் கருப்பண்ணன் தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பாளர்கள்  விஜயகுமார், மகிழ்வளவன், செந்தில்குமார், திருப்பதி, இந்தமங்கலம்  பிரகாஷ், சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியில் பேருந்து நிலையம் முன்பு திரளான கட்சி தொண்டர்கள் கூடி சட்ட மேதை அண்ணல் அம்பேத்காரின் சிறப்புக்களை எடுத்துக் கூறி சிறப்புரை ஆற்றினார்.


அதனை தொடர்ந்து கட்சியின் தலைவர் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் வாழ்க என முழக்கமிட்டும், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு  இனிப்புக்கள் வழங்கியும் கொண்டாடினார். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பிருந்து பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக கோஷமிட்டு சென்றனர்.


இந்நிகழ்ச்சியில்  ஒன்றிய செயலளர்கள் செல்லன், முருகேசன், ஒன்றிய பொருளாளர் திருமுருகன், ஒன்றிய துணைச் செயலாளர்கள்  மாரியப்பன், குமார்,வால்டர்குமார், நகர செயலாளர்கள் அம்பேத்கர் நிர்வாகிகள் மணிவண்ணன், பிரியா, பழனியம்மாள், தனலட்சுமி, அருள்குமார், துறை விஜி, மாறன், ராஜேந்திரன், சக்திவேல்,விஜய்,  பிரபு,தமிழரசன்,நாகராஜ் நடராஜ், பாலகிருஷ்ணன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884