Type Here to Get Search Results !

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி – 2025 மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி முருகன் கோவில் அருகில் தொடங்கிய பேரணி சுப்பிரமணிய சிவ நினைவு மண்டபத்தில் நிறைவு பெற்றது. சாலை பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணர்வு பேரணி 27 ஜனவரி 2025 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் 250 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, சாலை பாதுகாப்பின் அவசியம் மற்றும் போதைப் பொருள்களின் தீமைகளை மக்களுக்கு எடுத்துரைத்தனர்.  

இப்பேரணியை பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி NSS (நாட்டு நலப்பணி திட்டம்) மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான தொடக்க விழாவில், துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) பென்னாகரம் டாக்டர் பி. மஹாலக்ஷ்மி, கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெ. பாக்யமணி இணைந்து பச்சை கொடி அசைத்து பேரணியை தொடங்கினர்.  


பேரணி மட்டுமல்லாமல், சாலை பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள்களின் தீமைகளை மக்களுக்கு விளக்கும் மாணவர்கள் அரங்கேற்றிய விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது, இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், துணை காவல் கண்காணிப்பாளர்கள், பாப்பாரப்பட்டி காவல் துறையினர், மாணவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினர்.  


இந்த விழிப்புணர்வு பேரணியை JCI தருமபுரி விங்ஸ், ஸ்ரீ தேவி மகா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை, பெண்கள் உரிமைகளுக்கான உலகப் பேரவை,  கிரெஸ்ட் இந்தியா பவுண்டேஷன் ஆகிய தன்னார்வ அமைப்புகள் ஒருங்கிணைத்தன. தன்னார்வ அமைப்புகள் சார்பில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நோட்டீஸ்களும் இதில் சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவதின் அவசியம் மற்றும் போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய விவரங்கள் குறிப்பிடபட்டிருந்தது.


இதில் துணை காவல் கண்காணிப்பாளர் பென்னாகரம் டாக்டர் பி. மஹாலக்ஷ்மி பேரணியிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் நேரடியாக பங்கேற்று மக்களிடம் சாலை விதிகளை பின்பற்றுவது, பொறுப்புடன் நடந்து கொள்வது போன்ற முக்கிய செய்திகளை எடுத்துரைத்தார். நிகழ்வின் வெற்றிக்காக மாணவர்களும் தன்னார்வ அமைப்புகளும் காவல்துறையினரும் இணைந்து செயல்பட்டதற்காக நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884