தருமபுரி அடுத்த மாடலாம்பட்டியில் அமைந்துள்ள சக்திகைலாஷ் மகளிர் கல்லூரி மாணவிகளுக்காக ஜேசிஐ-தர்மபுரி சமூக மேம்பாட்டுத் துறை சார்பில், ஜேசி ஜி. யுவராணி (சமூக மேம்பாட்டுத் துணைத் தலைவர்) தலைமையில், மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாதவிடாய் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை அறிவுறுத்துதல், அது குறித்த தவறான புரிதல்களை நீக்குதல், சமூகத் தடைகளை உடைத்தல், மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான நடைமுறைகளை கையாளுதல் போன்றவை மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்:
- மாதவிடாய் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து விரிவான விளக்கப்பட்டது.
- பொதுவாக மாதவிடாய் தொடர்பாக காணப்படும் கவலைகள் மற்றும் தவறான புரிதல்களுக்கு தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- மாதவிடாய் காலத்தில் பின்பற்றவேண்டிய சுகாதார வழிமுறைகள் விளக்கப்பட்டது.
- மாதவிடாய் குறித்த மாணவிகளின் கேள்வி-பதில்கள் மற்றும் சந்தேகங்களை ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வு, மாணவிகளின் ஆரோக்கியம் மற்றும் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படுத்தும் வகையில் அமைந்தது, மேலும், இது மாணவிகளுக்கிடையே தன்னம்பிக்கையை வளர்த்ததுடன், அவர்களின் ஆரோக்கியம் குறித்த புரிதலை மேம்படுத்த உதவியது.
இந்த நிகழ்வில் சக்தி கைலாஷ் கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக