Type Here to Get Search Results !

தேசிய மின்சிக்கன வார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் சார்பில், தேசிய மின் சிக்கன வார விழாவையொட்டி, தேசிய மின்சிக்கன வார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் சார்பில், தேசிய மின்சிக்கன வார விழாவையொட்டி, தேசிய மின்சிக்கன வார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.01.2025) கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.


தருமபுரி மின் பகிர்மான வட்டம் சார்பாக மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பினை பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி பாரதிபுரம் வரை சென்று பேரணி முடிவடைந்தது. தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் சார்பாக தேசிய மின் சிக்கன வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மின் சேமிப்பு மற்றும் மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி இன்று துவக்கப்பட்டுள்ளது.


மின் சேமிப்பிற்கான நடவடிக்கையாக, தேவையில்லாமல் இயங்கும் விளக்குகள், மின்விசிறிகள், தொலைக்காட்சி மற்றும் ஏர்கண்டிசனர் பெட்டிகள் அணைப்பதன் மூலம் மின்சாரத்தை சேமிப்போம். சாதாரண குண்டு பல்புக்கு பதிலாக, சி.எப்.எல். எல்.ஈ.டி. விளக்கை பயன்படுத்தி 60% முதல் 80% வரை மின்சாரத்தை சேமிப்போம் மற்றும் புவி வெப்பமயமாவதை குறைப்போம். ஏ.சி யை ஓடவிட்டு சன்னலையும் கதவையும் மூட மறப்பது, ஏ.சி யை ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆஃப் செய்துவிட்டு சுவிட்சை அணைக்காமல் ஸ்டெபிளசரை பல மணி நேரம் இயக்கத்தில் வைப்பது, வெளியில் சென்ற பின் மின் விசிறி, மின் விளக்கு,ஏ.சி. ஆகியவற்றை அணைக்க மறப்பது, நட்சத்திரக் குறியீடு மின் விசிறி, பம்புசெட்டு, குளிர்சாதன பெட்டி, ஏர்கண்டீசன் ஆகிய மின்சாதனங்களை உபயோகித்து மின்சாரத்தை சேமிப்போம். 


சூடான பின்னும் அணைக்கப்படாத சூடேற்றும் கருவி (வாட்டர் ஹீட்டர்) மின்மோட்டாரில் ஐ எஸ் ஐ முத்திரையிட்ட மின்தேக்கியை உபயோகித்து மின்சாரத்தை சேமிப்போம். நிரம்பிய பின்னும் அணைக்கப்படாத நீரேற்றும் இயந்திரம் (பம்புசெட்டு) குழல் விளக்குகளில் (Tube Light) எலக்ட்ரானிக் சோக்குகளையும், மின் விசிறிகளில் எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்களையும் பயன்படுத்தி 40% வரை மின்சாரத்தை சேமிப்போம். சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வோம். சூரிய ஒளி மூலம் நீர் சூடேற்றும் கருவியை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிபோம். புதிய கட்டிடங்களை கட்டும் போதே போதிய வெளிச்சம், காற்றோட்டம், மென்மையான வர்ணம் போன்றவைகளை கொண்டு வடிவமைத்து மின்சாரத்தை சேமிப்போம். உள்ளிட்ட மின் சேமிப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.


பொதுமக்களுக்கு மின் பாதுகாப்பு விழிப்புணர்வாக, மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்களை போதுமான இடைவெளி விட்டு கட்டி மின் விபத்தை தவிர்க்கலாம். டி.வி. ஆண்டனா, கேபிள் ஒயர் மற்றும் சீரியல் டவர்களை அருகே செல்லும் மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் சுட்டாதீர்கள். மிக உயரமான பொதிஏற்றிய வாகனங்களை மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகிலோ, கீழோ ஓட்டிச் செல்லாதீர்கள். திருவிழா காலத்தில் சாலையில் உயரமான சீரியல் டவர்கள் மற்றும் தேர் ஓட்டுவதற்கு முன்னர் ஊழியர்களின் உதவியை நாடுங்கள்.


மேல்நிலை கம்பிகளின் மீது உரசும் மரக்கிளைகளை மின் ஊழியர்களின் உதவியோடு அகற்றி மின் விபத்தை தவிர்த்திடுங்கள். மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்து கிடக்கும் மின் கம்பிகளுக்கு அருகில் நெருங்காதீர்கள் உடனே மின்சார வாரியத்திற்கு தொலைபேசி மூலம் தவவல் தெரிவியுங்கள். மின் கம்பத்திலோ, இழுவை கம்பிகளிலோ (ஸ்டே) கால்நடைகளை கட்டாதீர். மின் கம்பங்களை பந்தல் காலாகவோ அல்லது கட்டிட சுவராகவோ பயன்படுத்துவதை தவிர்ப்போம்.


மழைக்காலங்களில் மின் மாற்றி, மின் கம்பங்கள் அருகே செல்லாதீர்கள். மின் கம்பங்களில் மின் வாரிய அனுமதியின்றி விளம்பர பலகை மற்றும் கேபிள் ஒயர் கட்டுவதால் மின் விபத்து ஏற்படுகிறது. மற்றும் சட்டப்படி குற்றமாகும். பயிர்களை விலங்குகளிடமிருந்து காப்பாற்ற மின்வேலி அமைப்பது சட்டப்படி பெருங்குற்றமாகும், மேலும் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும். மின் கசிவு (Earth Leakage) ரிலே மற்றும் பிரேக்கர்களை மின் இணைப்பில் பயன்படுத்தி மின் விபத்தினை தவிர்க்கவும். இடி மின்னல் மற்றும் மழைக்காலங்களில் வீட்டில் டி.வி, கிரைண்டர், மிக்ஸி, பிரிட்ஜ் ஆகிய மின் சாதனங்களை சுவர் சொருகியிலிருந்து (Plug Point) எடுத்து மின் விபத்தால் மின் சாதனங்கள் பழுதாவதையும் மின் விபத்தையும் தவிர்க்கலாம். 


மின் கம்பத்திலோ (அ) மின்மாற்றியிலோ ஏதேனும் பழுது ஏற்பட்டால் பழுதை நிவர்த்தி செய்வதற்கு தனியார் ஊழியர்களை (Electricians) பயன்படுத்தாமல் மின்வாரிய பணியாளர்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு ஏற்படும் மின்விபத்தினை தவிர்க்கவும். தருமபுரி மின்பகிர்மான வட்டம் மின்தடை தொடர்பான புகார்களை தங்களின் 10 இலக்க மின் இணைப்பு எண்ணுடன் இலவச எண் : 1912, 1800 425 3306 வாட்சப் எண் : 94458 86385 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


இப்பேரணியில் தருமபுரி மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் திருமதி.T.சுமதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஜோதிசந்திரா, அனைத்து செயற் பொறியாளர்கள், கோட்டம் மற்றும் உபகோட்ட பொறியாளர்கள், மத்திய அலுவலக தொழில்நுட்ப பணியாளர்கள், நிர்வாக பிரிவு அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies