மேலும், 64 முகாம்கள் மூலம், 4,000 யூனிட் மற்றும் தினசரி ரத்த தானத்தில் 7,000 யூனிட் ரத்தம் ரத்த வங்கியில் வழங்கியுள்ளார். அரசு தொடர்பான திட்டங்கள் மற்றும் தனியார் அமைப்பு மூலம் தொடர்ந்து செய்து வந்தார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மாவட்டம் முழுவதும், 80 ஆயிரம் மரக்கன்றுகள் இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் நட்டு பராமரித்து வந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், மருத்துவம், கல்வி சுற்றுச்சூழல், விவசாயம், பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்டவற்றை முன்னெடுக்க ஆதி பவுண்டேஷன் அறக்கட்டளையை கடந்த, 26 அன்று தர்மபுரியில் தொடங்கினார். இதில், பென்னாகரம் பா.ம.க., எம்.எல்.ஏ., ஜி.கே.மணி ஆதி பவுண்டேஷன் லோகோவை வெளியிட்டார். குடியுரிமை மக்கள் இயக்க தலைவர் மகேந்திரன் சிறப்புரையாற்றினார். தர்மபுரி, பா.ம.க., எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் வாழ்த்துரை வழங்கினார்.
இதில், டி.என்.சி., குழும தலைவர் DNC மணிவண்ணன், எஸ்.எஸ்.எஸ்., ஜுவல்லரி சக்திவேல், டி.என்.சி.,சிட்ஸ் நிர்வாக இயக்குனர் விவேகானந்தன், கண்தான மைய தலைவர் மாணிக்கம், தே.மு.தி.க., கிழக்கு மாவட்ட செயலாளர், ஜெயம் சமுதாய வளமையம் கென்னடி, பா.ம.க., மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாநிலத் துணைத் தலைவர் சாந்தமூர்த்தி, மருத்துவர் அசோக்குமார், பழனி மற்றும் ஆசிரியர் இளங்கோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பசுமை ஆசிரியர் சங்கர் நன்றி கூறினார்.
இந்த விழாவிற்கான சிறப்பான ஏற்பாடுகளை ஆதி பவுண்டேஷன் நிர்வாகிகள் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக