வீட்டு வேலை செய்வோரின் கவனத்திற்கு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 ஜனவரி, 2025

வீட்டு வேலை செய்வோரின் கவனத்திற்கு.


தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சென்னை செயலாளர் / கூடுதல் தொழிலாளர் ஆணையர், தமிழ்நாடு வீட்டுப்பணியாளர்கள் நலவாரியம் அவர்களின் உத்தரவின் படி தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தருமபுரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) திரு.பா.சங்கர் அவர்கள் தெரிவித்ததாவது:- தருமபுரி மாவட்டத்தில் வீட்டுப்பணியில் ஈடுபடும் பணியாளர்களை (DOME) தமிழ்நாடு வீட்டுப்பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்வதற்கு ஏதுவாக தருமபுரி தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. 


மேற்காணும் தொழில்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், கைபேசி எண், ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்து அரசின் நலத்திட்டங்களை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என தருமபுரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) திரு.பா.சங்கர் அவர்கள் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad