Type Here to Get Search Results !

தமிழ்நாடு முதலமைச்சரின் ”நீர்நிலைப் பாதுகாவலர் விருது” – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.


தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழலையும் சூழல் அமைப்புகளையும் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இச்சூழல் அமைப்புகளுக்கு மூலாதாரமாக விளங்குவது நீர் நிலைகளாகும். எனவே, இச்சூழல் அமைப்புகளைப் பாதுகாத்துப் பேணிடவும், மாநிலத்தின் நீர் வளத்தைப் பெருக்கிடவும் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகளைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் செயல்பாட்டாளர்களான பொதுமக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகளைப் போற்றி கவுரவிக்கவும், நீர் நிலைகளைப் பாதுக்கத்திட வேண்டும் என்ற எண்ணத்தை மக்களிடையே விதைத்திடவும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒருவர் என 38 பேருக்கு “மாண்புமிகு முதலமைச்சரின் நீர்நிலைப்பாதுகாவலர்” விருதும், ரூ. 1 இலட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.


அதன்படி இந்த ஆண்டிற்கான விருதுகள் விரைவில் வழங்கப்படவுள்ளன. விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 31.01.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விருதிற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் “தமிழ்நாடு விருதுகள் (TN Awards)” (http://awards.tn.gov.in) வலைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.


இவ்விருது குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் http://www.environment.tn.gov.in/ மற்றும் https://tnclimatechangemission.in/home/ ஆகிய வலைதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  • விண்ணப்பிக்கக்கூடிய நபர்கள் எந்த மாவட்டத்தில் அதிகபட்ச பணிகளை செயல்படுத்தியுள்ளனரோ, அம்மாவட்டத்தினைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
  • ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க முடியாது. அவ்வாறு விண்ணப்பிக்கப்படும் பட்சத்தில், ஒரு மாவட்டத்தின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். 
  • “தமிழ்நாடு விருதுகள் (TN Awards)” (http://awards.tn.gov.in) இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட இணையவழி விண்ணப்பங்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
  • தேர்வுக் குழுவினரின் முடிவே இறுதியானது.


என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884