Type Here to Get Search Results !

பாலக்கோடு ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பேரூராட்சி கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோயில் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயில் திருவிழாவினை 12 கிராம பொதுமக்கள் மற்றும் அனைத்து சமூகத்தினரும் இனைந்து வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.


உள்ளுர், வெளியூர், மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த இலட்சகணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில்  கலந்து கொண்டு திரெளபதி அம்மன் கோயில் வளாகத்தில் இருந்து ஸ்ரீபுதூர் மாரியம்மன் கோயில் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே சென்று  பால்குடம், தீச்சட்டி, அலகு குத்துதல், சாமி வேடம் அணிந்து செல்லுதல், வாகனங்களை இழுத்தல் உள்ளிட்ட வேண்டுதல்களை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்வர். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் பெளர்ணமியை முன்னிட்டு நடைபெறும் இத்திருவிழாவானது வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் 14 ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது.


இத்திருவிழாவில் பக்தர்களுக்கு  இடையூறு ஏற்படும் வகையில் பேரூராட்சி,  கடைவீதி, பஸ் நிலையம், எம்.ஜி.ரோடு, ஸ்தூபி மைதானம், கல்கூடபட்டி, தக்காளிமண்டி முதல் காவல் நிலையம் வரையிலும், காவல் நிலையம் முதல் ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோயில் வரையிலும், புறவழி சாலை ஆகிய  பகுதிகளில் பொதுஇடம் மற்றும்  நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கடைகள், நடைபாதை கடைகள் ஆகியவை உள்ளதால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மேலும் திருவிழா நடைபெற உள்ளதால் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது, 


இதனை கருத்தில் கொண்டு  மாவட்ட நிர்வாகம் உடனடியாக சாலை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884