தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆணையின்படி தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம், பள்ளி கல்வித்துறை தமிழ்நாடு இணைந்து நடத்தும் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் சார்பில் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு மாதிரி வடிவம் உருவாக்கும் போட்டி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட மேலாளர் கௌதம் சண்முகம் தலைமை தாங்கி அறிவியல் கண்டுபிடிப்புகளில் தேர்வான 17 குழு அணிகளை சேர்ந்த 80 மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில் வழிகாட்டியாளர்களாக கபில்தேவ், வேலுச்சாமி, ஹரிஹரசுதன், நாமக்கல் செல்வம் பொரியல் கல்லூரி சேர்ந்த பேராசிரியர் முனைவர் சந்தோஷ், சவிதா, கோபிநாத், வினிதா, ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களை ஊக்கவித்து பேசினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக