பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குப்பன்கொட்டாய் கிராமத்திற்க்கு சுடுகாடு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்ட குழு தலைவர் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது,
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே குப்பன் கொட்டாய் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 70 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் இறந்தவர்களை அடக்கம் முடியாமல் வீட்டின் அருகிலேயே அடக்கம் செய்து வருகின்றனர்.
சொந்த வீடு, நிலம் இல்லாதவர்கள் உடலை அடக்கம் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். உயிருடன் இருக்கும் போதும் வாழ இடமில்லை, செத்த பிறகும் புதைக்க இடமில்லை சுடுகாடு ஒதுக்கி தர கோரி தமிழக முதல்வர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனு கொடுத்தும் விடிவு இல்லை இனி போராடுவதை தவிர வேறு வழியில்லை என கோரி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்து, வட்ட செயலாளர் காரல் மார்க்ஸ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சேகர், தலைவர் ஜெயராம் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
அப்போது பேசியவர்கள் சமூக நீதி, சமதர்மம், சகோதரத்துவம் பேசும் திராவிட மாடல் ஆட்சியில் அதிகாரிகள் சுடுகாடு அமைத்து தராமல் ஏமாற்றி வருவதாகவும், அதே சமயம் அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை தனியாருக்கு பட்டா போட்டு தருவதில் மட்டும் முனைப்பு காட்டி வருவதாகவும், எங்கள் கிராமத்திற்க்கு உடனடியாக சுடுகாடு அமைத்து தராவிட்டால், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவோம் எனவும், மேலும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டு மொத்த கிராமமும் புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஊர் பொதுமக்கள், ஊர் கவுண்டர்கள், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக