Type Here to Get Search Results !

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் தொடர்பான வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகளை ஆனந்தகுமார், ஐஏஎஸ் ஆய்வு.


தருமபுரி மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் 2025-ல் பெறப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் தொடர்பான வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகளை வாக்காளார் பட்டியல் பார்வையாளர் மரு.இரா.ஆனந்தகுமார், இன்று (04.12.2024) மனுதாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் 2025-ல் பெறப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் தொடர்பாக, தருமபுரி மாவட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் இன்று தருமபுரி மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளான தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் மீது சம்மந்தப்பட்ட மனுதாரர்களின் வீடுகளுக்கே சென்று கள ஆய்வு (Super Check) மேற்கொண்டார்.இதனைத்தொடர்ந்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் செயல்பட்டு வரும் தேர்தல் இணையதளம் வாயிலாக (ERONET 2.0) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி திருத்தம் தொடர்பான பணி முன்னேற்ற விவரங்கள் குறித்து வாக்காளார் பட்டியல் பார்வையாளர் மரு.இரா.ஆனந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின் போது, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் இரா.காயத்ரி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் சி.சின்னுசாமி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) அசோக்குமார் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884