கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கொல்லப்பள்ளி என்ற பேருந்து நிறுத்தம் அருகே சுமார் 45வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார், அவ்வழியாக அதிவேகமாக வந்து இருசக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலத்த காயம் அடைந்தார். இவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து இவரைப் பற்றி காவல்துறையினர் விசாரித்ததில் உறவினர்கள் யாரும் இல்லை என்பது தெரியவந்தது.
இந்நிலையில் அவர் சமீபத்தில் சிகிச்சை பலனின்றி தருமபுரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனை அடுத்து கிருஷ்ணகிரி அறம் சிகரம் கோபி சூளகிரி காவலருக்கு உதவி செய்து மை தருமபுரி அமைப்பினரை தொடர்பு கொண்டார். இதனையடுத்து சூளகிரி காவல் நிலைய காவலர் ஆனந்தராஜ், மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர் சண்முகம், செந்தில், மருத்துவர் முஹம்மத் ஜாபர், அருண் பிரசாத் ஆகியோர் அவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமைப்பினர் இதுவரை 121 ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.