தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கோடை மழை, தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் இருந்து வீணாக வெளியேறும் மழைநீரை சேமிக்க முடியாமல் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் பெட்டமுகிலாலம், நாமகிரி, மற்றும் பெருங்காடு, சாஸ்திரமுட்லு உள்ளிட்ட பல்வேறு மலை பகுதிகளிலிருந்து அதிக அளவில் வெளியேறும் மழைநீர் உப்புபள்ளம் ஆற்றின் வழியாகவும், பஞ்சப்பள்ளி சின்னாறு அணையிலிருந்து வெளியேறும் நீரும் சின்னாற்றில் கலக்கின்றது.
இப்பகுதியில் கரும்பு, வாழை, தெண்ணை, நெல், காய்கறிகள், பூக்கள் உள்ளிட்டவை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். வறட்சி காலத்தில் விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் இல்லாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் போதிய தடுப்பணைகள் இல்லாததால் மழைநீர் சின்னாற்றில் கலந்து பிறகு ஒகேனக்கல் ஆற்றில் கலக்கின்றது.
மழை நீரை சேமிக்கும் வகையில் சின்னாற்றிலிருந்து செங்கன்பஷ் வந்தாலவ் ஏரிக்கு மழைநீர் கொண்டு வர இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பல முறை அரக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தற்போது தொல்லைகாது என்ற இடத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் மழை நீரை பொதுமக்கள் கண்டுகழித்து வருகின்றனர். எனவே தமிழக அரசு ஆற்றுநீரை விவசாயத்திற்கு சேமிக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.