தருமபுரி மாவட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (04.12.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம், நாய்க்கன்கொட்டாய் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி கட்டிடம், கழிவறை வசதி, குடிநீர் வாசதி மற்றும் மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பழைய வகுப்பறை கட்டிடங்களை அகற்றிவிட்டு இப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்களை கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், தருமபுரி மாவட்டம், கிருஷ்ணபுரம் ஊராட்சி மாவடிப்பட்டியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், நத்தம் காலனியில் அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சுவர்களுக்கு வர்ணம் பூசி திருக்குறள், ஓவியங்களை வரைய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.கலைவாணி, திருமதி.சத்யா, உதவி பொறியாளர்கள் திரு.சீனிவாசன், திருமதி.சுமதி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.