Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் குமரி முனையில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி திருக்குறள் போட்டிகள்.


முக்கடல் சூழும் குமரிமுனை கடல் நடுவே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 2000-ஆவது ஆண்டின் முதல் நாளில் 133 அடி உயரமுடைய  அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையால்  திருக்குறள் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.


போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள், நேரில் வாழ்த்தி பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்க உள்ளார்கள். உலகில் இலக்கிய வளம் கொண்ட  சில மொழிகளில் தமிழ் மொழி முதன்மையானது.  பல்வேறு  சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியில் எண்ணற்ற இலக்கியங்களும், நூல்களும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இயற்றப்பட்டுள்ளன. அந்த வகையில் 2000 ஆண்டுகளைக் கடந்தும் இன்றுவரை உலக மக்களின் வாழ்வை செம்மைப் படுத்துகின்ற கருத்துக்கள் கொண்ட ஒரு மிகச்சிறந்த தமிழ் நூலாக கருதப்படுவது திருக்குறள் ஆகும். காலத்தைக் கடந்து உலகப் பொதுமறையாக எழுந்து நிற்கிறது.


முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் நிறுவப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவையொட்டி பல்வேறு போட்டிகளை தமிழ் வளர்ச்சித்துறை நடத்தி பரிசுகள் வழங்கவுள்ளது. அதன் விவரம் வருமாறு

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி.

  • பிரிவு- 1

     

    6 வயது வரையிலானவர்களுக்கு

    ஒரு அதிகாரம்

    பிரிவு- 2

     

    7 முதல் 10 வயது வரையிலானவர்களுக்கு
    3 அதிகாரங்கள்

    பிரிவு- 3

     

    8 முதல் 14 வயது வரையிலானவர்களுக்கு

    5 அதிகாரங்கள்

     

மூன்று பிரிவினரும் திருக்குறளை ஒப்புவித்து அதனை வீடியோவாக பதிவு செய்து அனுப்ப வேண்டும்.
 
கட்டுரைப் போட்டி

தலைப்புகள்

கற்றலின் மேன்மைக் குறித்து திருக்குறள்அன்றாட வாழ்க்கையில் திருக்குறளின் பங்கு கட்டுரைகளை தட்டச்சுச் செய்து PDF கோப்பாக அனுப்ப வேண்டும்.

ஓவியப் போட்டிகள்

  • பிரிவு- 1

     

    அனைத்துப் பிரிவினர்

    திருக்குறளில், ஏதேனும் ஒரு குறளைக் கருப்பொருளாக கொண்டு(content) ஓவியங்கள் அமைய வேண்டும். அல்லது திருக்குறளின் நன்மைகள் குறித்து ஓவியங்கள் அமையலாம்.

     

    பிரிவு- 2

     

    1ம் வகுப்பு முதல் 5 வரையிலானவர்கள்

    திருவள்ளுவர் படத்தை ஓவியமாக தீட்ட வேண்டும்.

     

இரு பிரிவினரும் வரைந்த ஓவியங்களை புகைப்படங்களாக எடுத்து அனுப்ப வேண்டும்.

குறும்படப் போட்டிகள்

திருக்குறளை மையமாகக் கொண்டு 3 நிமிடங்களுக்குள் அமைய வேண்டும். படைப்புகளை mp4 format ல் அனுப்ப வேண்டும்

கவிதைப் போட்டி

கவிதைகள் 16 வரிக்குள் அமைய வேண்டும்.


சுயமிப் (செல்ஃபி) போட்டி
அனைத்து வயதினர்தங்கள் பகுதியில் பொது இடங்களில் உள்ள திருவள்ளுவர் சிலை, அல்லது திருக்குறள் எழுத்தப்பட்ட இடங்களின் முன்புபோட்டியாளர்கள் தங்களது படைப்புகளை அனுப்பவேண்டும்.


போட்டியாளர்கள் தங்களது படைப்புகளை  18.12.2024-க்குள் வீடியோ, ஆடியோ, போட்டோ, doc,  மற்றும் pdf வடிவில்  tndiprmhkural@gmail.com ஈமெயில் முகவரியில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம், மேலும் விவரங்களுக்கு  tndiprmhkural@gmail.com  என்ற மின்னஞ்சல்  முகவரியில் தொடர்பு கொள்ளவும், என செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884