தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த தொல்லகாது ஆற்றில் திடீர் வெள்ள பெருக்கால், பெருக்கெடுத்து ஓடும் மழைநீரை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்து வருகின்றனர்.
பாலக்கோடு அருகே சென்னப்பன் கொட்டாய் கிராமத்தின் வழியாக சின்னாற்றின் பகுதியில் அமைந்துள்ளது தொல்லகாது ஆறு, அதிக மழை காலங்களிலும், சின்னாறு அணையின் உபரி நீர் திறக்கும் போதும் இந்த ஆற்றிற்க்கு தண்ணீர் வரத்து ஏற்படும்.
கடந்த சில வருடங்களாக வறட்சியின் பிடியில் சிக்கி தண்ணீரின்றி வறண்டு பாலைவனமாக காட்சியளித்த சின்னாற்றில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், பெட்டமுகிலாலம், நாமகிரி, மற்றும் பெருங்காடு, சாஸ்திரமுட்லு உள்ளிட்ட பல்வேறு மலை பகுதிகளிலிருந்து அதிக அளவில் வெளியேறும் மழைநீர் உப்புபள்ளம் ஆற்றின் வழியாக சின்னாற்றில் கலந்து தொல்லாகாது ஆற்றில் கடந்த 3 நாட்களாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது, திடீர் தண்ணீர் வரவால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் தொல்லகாது ஆற்றில் ஓடும் தண்ணீரை ஆர்வமுடன் கண்டு களித்து வருகின்றனர்.