Type Here to Get Search Results !

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டி.


தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா நிகழ்வு வரும் டிசம்பர் 28, 2024 அன்று விருதுநகரில் நடைபெறவுள்ளது. 38 மாவட்டங்களிலிருந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 3 குழுக்கள் வீதம் மொத்தம் 114 குழுக்கள் பங்கேற்க வேண்டும்.


திருக்குறள் வினாடி வினா - அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியுரியும் அனைத்துத் துறை / அனைத்து நிலை அலுவலர்களும், அரசு / அரசு உதவி பெறும் / அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வகை தனியார் பள்ளிகள் / கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்களும் கலந்து கொள்ளலாம். தேர்வு நடைபெறும்.


இடம்: அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தர்மபுரி. 

தேர்வு நாள்: 21. 12.2024 சனிக்கிழமை 

தேர்வு நேரம்: பிற்பகல் 2 மணி. 


போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளோர் கீழ்காணும் Google Form - ல் பூர்த்தி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாவட்ட அளவில் முதல்நிலை எழுத்து தேர்வு (கொள்குறி வகை - 50 வினாக்கள்) நடத்தி அதில் சிறந்த மதிப்பெண் பெறும் 9 நபர்களை 3 குழுக்களாக இணைந்து இறுதிப் போட்டியில் பங்கேற்க வேண்டும்


மாவட்ட அளவிலான முதல் நிலைத் தேர்வு, தருமபுரி மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் கூடத்தில் 21.12.2024 (சனிக்கிழமை) அன்று பிற்பகல் 02.00 மணிக்கு போட்டியாளர்கள் அனைவருக்கும் தேர்வு தொடங்கப்படும். போட்டியாளர்களில் எவரேனும் விழி சவால் மாற்றுத்திறனாளி இருந்தால் விதிமுறைகளின் படி எழுத்தாளர் (Scribe) நியமித்து கூடுதல் நேரம் (1 மணி நேரம் 20 நிமிடம்) வழங்கப்படும். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc-3RFL4OY9MAKka8CknIhbirAP8DSZITjMmlnpTqn5eVTh-w/viewform?usp=dialog

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884