தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்துள்ள பதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 15 வயது மகள், மனநலம் குன்றியவர், இவர் தர்மபுரியில் உள்ள காப்பகத்தில் 9ம் வகுப்பு படித்து வந்தவர், படிப்பை கைவிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீட்டிற்க்கு வந்து விட்டார். இவரது வீட்டிற்க்கு அருகில் உள்ள இவரது உறவினரான கூலி தொழிலாளி சேட்டு (வயது.42) என்பவர் மாணவியை கட்டாயபடுத்தி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
நேற்று முன்தினம் மாணவி வீட்டில் அழுது கொண்டே இருந்ததால் பெற்றோர் விசாரித்ததில் நடந்ததை கூறி உள்ளார், இது குறித்து பெற்றோர் பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் போக்சோ வழக்கு பதிவு செய்து கூலி தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.