தர்மபுரி அரசு மருத்துவமனை அருகில் ஸ்ரீ ராமாபோடிங் வளாகத்தில் தர்மபுரி நகர அரிமா சங்கம் முன்னாள் தலைவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது இதில் தர்மபுரி நகர அரிமா சங்க தலைவர் அம்ஜத் தலைமை வைத்தார். சிறப்பு விருந்தினர் முன்னாள் பண்பாட்டு இயக்குனர் தனபால் சிறப்பு அழைப்பாளர் மாவட்ட முதன்மை துணை ஆளுநர் விஸ்வநாதன் முன்னாள் தலைவர்கள் சார்பாக வரவேற்பு முன்னாள் மாவட்ட ஆளுநர் டி என் பி செல்வராஜ். முன்னாள் மாவட்ட அமைச்சரவை ஆலோசனை நாகராஜன் வாழ்த்துரை அமைச்சரவை கூடுதல் பொருளாளர் சிவப்பிரகாசம், மாவட்ட தலைவர் மோகன செந்தில். வட்டாரத் தலைவர் ஆறுமுகம் .அரிமா சங்க உறுப்பினர் ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.
இதில் தர்மபுரி நகர அரிமா சங்க செயலாளர் அல்லி முத்து, தர்மபுரி நகர அரிமா சங்க சேவை எம் ஜி சங்கர், பொருளாளர் லட்சுமி காந்தன் ஆகியோர் முன்னாள் தலைவர் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் தலைவர்கள் பெருமாள் டி.என்.வி. செல்வராஜ், நாகராஜ், கோபாலகிருஷ்ணன், சுப்பிரமணியன், சிவப்பிரகாசம், இளங்கோவன், கமலேசன், மாணிக்கம், சௌந்தர்ராஜ், ரவி, இளவரசன், கோவிந்தராஜ், ஷிலா செல்வராஜ், ஜெகநாதன், ஆறுமுகம், மோகன் செந்தில், ராஜேந்திரன், தங்கவேல், விஜியேந்திரபாபு ஆகியோர் முன்னாள் தலைவர்களுக்கு பாராட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அரச பள்ளி மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

.jpg)