சேலம் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஆடவர் மற்றும் மகளிருக்கான தடகளப்போட்டிகள் 09-12-2024 மற்றும் 10-12-2924 ஆகிய நாட்களில் சேலம் பெரியார்பல்கலைக்கழத்தில் நடைபெற்றது. அதில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி தமிழ் த்துறை மூன்றாம் ஆண்டு மாணவி G. கார்த்திகா. 100 மீட்டர் ஓட்ட போட்டியில் 12.88 நொடிகளில் கடந்து இண்டாம் இடம்-வெள்ளி பதக்கம் இதே மாணவி 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் 26.85 நொடிகளில் கடந்து இரண்டாம் இடம் வெள்ளிப் பதக்கம் வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இளம் அறிவியல் தாவரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி D.ஷாலினி - 10000 மீட்டர் ஓட்டப்போட்டியில் இரண்டாம் இடம் -வெள்ளிப் பதக்கம் வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் இதே மாணவி தமிழ்நாடு தடகள சங்கத்தின் சார்பாக அண்மையில் ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் 5000 மீட்டர் ஓட்ட போட்டிகளில் மூன்றாம் இடம் பெற்று தர்மபுரி மாவட்டத்திற்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்று தொடர்ந்து சாதனை படைத்துவரும் வீராங்கனைகளுக்கு 18-12-2024 இன்று கல்லூரி முதல்வர் முனைவர் கோ கண்ணன், உடற்கல்வி இயக்குனர் முனைவர் கு. பாலமுருகன், அனைத்து துறை பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் கௌரவ விரிவுரையாளர்கள் விளையாட்டு ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் முனைவர் கு பாலமுருகன் உடற்கல்வி இயக்குனர்.

.jpg)