பென்னாகரத்தில் உறைக் கிணற்றில் தவறி விழுந்த எருமையை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மடம் கிராமத்தைச் சேர்ந்தவர் புவனேசன் வயது 55.இவருக்கு சொந்தமான எருமை அருகில் உள்ள சம்பத்குமார் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது அங்குள்ள உறைக்கிணற்றில் தவறி விழுந்துள்ளது. பின்னர் மேலே வர முடியாமல் எருமை கத்தியது. இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் பென்னாகரம் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர், தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி எருமையை பத்திரமாக மீட்டனர்.

.jpg)