வருடம் முழுவதும் இயங்கி வந்த இந்த ஆலையானது, நிர்வாக சீர்கேட்டால் உற்பத்தி திறன் குறைந்து படிப்படியாக நலிவடைந்து இழுத்து மூடும் நிலையில் உள்ளது. இந்த ஆலையை நம்பி ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ள நிலையில் தற்போது வருடத்திற்க்கு 2 மாதங்கள் கூட முறையாக இயங்குவதில்லை. அதிலும் இயந்திரங்கள் அடிக்கடி கோளாறு ஏற்பட்டு ஆலை உற்பத்தி தடைபடுகிறது.
இந்நிலையில் தற்போது ஆளும் கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் உள்ளே புகுந்து தங்களது அதிகாரங்களை காட்டி வருகின்றனர். சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட சர்க்கரை ஆலை வளாகம் மற்றும் குடியிப்பு பகுதிகள் முழுவதும் முட்புதர்கள், காட்டு செடிகள் முளைத்து கொடிய நச்சு பாம்புகள் பெருகி அதிகளவில் நடமாடுவதால் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர், விவசாயிகள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து நிர்வாக தரப்பில் கேட்கும் போது ஆலையில் சம்பளம் வழங்குவதற்க்கு கூட பணம் இல்லாத நிலையில் பராமரிப்பு பணிகள் எவ்வாறு செய்ய முடியும் என தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு சர்க்கரை ஆலைக்கு புத்துயிர் அளித்து, விவசாயிகள், தொழிலாளர்களை காக்க முன் வரவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

.jpg)