Type Here to Get Search Results !

பாலக்கோடு மத்திய ஒன்றிய திமுக அலுவலகம் முன்பு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மத்திய ஒன்றிய திமுக அலுவலகம்  முன்பு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, மத்திய ஒன்றிய திமுக  சார்பில் ஒன்றிய செயலாளர் முனியப்பன்  தலைமையில்   கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு ஒன்றிய துணை செயலாளர் செந்தில்,ஒன்றிய பொருளார் குமார், மாவட்ட பிரதிநிதி மணி, மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜபாட்ரங்கதுரை, மாவட்ட மகளிர் அணி தலைவி ராஜேஸ்வரி, சுற்றுசூழல் அணி மாவட்ட தலைவர் செழியன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முர்த்துஜா, பேரூராட்சி துணைத் தலைவர் இதாயத்துல்லா, ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் முத்துசாமி,  அழகுசிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


ராஜ்யசபாவில் நேற்று முன்தினம் 17ம் தேதி நடைப்பெற்ற அரசியலமைப்புசட்டம் 75வது ஆண்டு விழாவில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இப்போது எதற்கெடுத்தாலும் அம்பேத்கார், அம்பேத்கார் என பேசுவது பேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதில் கடவுளின் பெயரை உச்சரித்தால் புண்ணியமாவது கிடைக்கும் என பேசியதை  கண்டித்து  திமுக சார்பில்  தமிழ்நாடு முழுவதும்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.


அதனை தொடர்ந்து பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு, திமுக பேரூர் கழகம் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி விலக கோரியும், மன்னிப்பு கேட்க கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நெசவாளர் அணி மாவட்ட தலைவர் பட்டு அஜிசுல்லா, ஒன்றிய பிரதிநிதி அன்வர்,  கவுன்சிலர் குமார், மாவட்ட பிரதிநிதி அமிர்ஜான், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் தருமன், ஒன்றியமேலவை பிரதிநிதி அருள்குமார், நிர்வாகிகள் இருசன், வெங்கடேசன், முருகன், ரவி, விஜயன், கணேசன், சிவசக்தி, முருகேசன், நாகராஜ், ஆறுமுகம், மாதன் மற்றும் கிளை செயலாளர்கள், கட்சி முன்னோடிகள், வாக்கு சாவடி முகவர்கள்  உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies