Type Here to Get Search Results !

இடுகாடு, சுடுகாடு இல்லை; மீனாற்றில் புதைக்கும் அவலம்; அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை.


தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வெங்கடசமுத்திரம் கிராமத்தில் சுமார் 3000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இங்கு சிறுபான்மையினர் மக்களுக்கென்று தனியாக இடுகாடு உள்ளது. இங்கு வசிக்கும் மற்ற சமூக மக்களுக்கு சுடுகாடு இல்லை, இடுகாடும் இல்லை. மோளையானூர் கிராம எல்லைக்கும் வெங்கடசமுத்திரம் கிராம எல்லைக்கும் இடையில் மீனாற்றில் இறந்த உடல்களை இடுகின்றனர் மற்றும் எரியூட்டுகின்றனர்.. 


இதில் என்ன ஒரு அவலநிலை என்றால் மழைகாலத்தில் ஆற்றில் பிணத்தை புதைக்கவும் மற்றும் எரிக்கவும் முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். புதைக்கப்பட்ட சடலங்கள் ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்கும் போது தண்ணீரில் அடித்துச் செல்கிறது. மழையில்லா காலங்களில் சடலங்கள் புதைக்க தோண்டும் போது உள்ளே இருக்கின்ற சடலத்தை தூக்கி எறிந்து அதே இடத்தில் மற்றொரு சடலத்தை புதைக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கிருமிகள் பரவி நோய் தொற்று பரவிவருகிறது. 


இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கிராம சபை பொறுப்பு அதிகாரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர் ஆகியோரிடம் ஊர் பொதுமக்கள், மகளிர், இளைஞர்கள் அனைவரும் இடுகாடு மற்றும் சுடுகாடு வேண்டி கோரிக்கை வைத்தனர். கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் நானும் உங்களைப் போன்று வெளியிலிருந்து படித்து விட்டு உள்ளே வந்தவன்தான் எனக்கும் தெரியும் ஒரு சென்ட் நிலம் கூட யாரும் தரமாட்டார்கள். ஒரு சென்ட் நிலம் கூட வாங்க முடியாது என்று கூறி விட்டார்.


ஊர் பொதுமக்கள் மகளிர் இளைஞர்கள் அனைவரும் ஐயா அவ்வாறு சொல்லாதீர்கள் வெங்கடசமுத்திரம் கிராமத்தில்  மீனாறு பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. அதை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர் அதை அரசு அதிகாரிகள் சுடுகாடு மற்றும் இடுகாடு ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று கூறினோம். இதுநாள்வரை ஊராட்சி நிர்வாகமும், வட்டார வளர்ச்சி அலுவலகமும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 


ஆகவே வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையும் மாவட்ட ஆட்சியர் அவர்களும் இதன் மீது கவனம் கொண்டு வெங்கடசமுத்திரம் கிராமத்தில் இடுகாடு மற்றும் சுடுகாடு ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies