Type Here to Get Search Results !

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து உபரிநீர் வெளியேறுவதை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


தருமபுரி மாவட்டம், கம்மம்பட்டி காட்டுவளவு பகுதியில் ஃபெஞ்சல்‌ புயல் காரணமாக பெய்த கனமழையால் அடித்துச் செல்லப்பட்ட தரைப் பாலத்தை சீரமைக்கும் பணியை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.ஆர்.ராஜேந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.


இதனைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அப்பனஅள்ளி கோம்பை கிராமத்தில் ஃபெஞ்சல்‌ புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிப்புக்குள்ளான வீடுகளை பார்வையிட்டு, 200-க்கும் மேற்பட்ட  குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள், போர்வை உள்ளிட்ட மழை நிவாரண உதவிப்பொருட்கள் அடங்கிய தொகுப்பினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.


கோடியூர் கிராமத்தில் ஃபெஞ்சல்‌ புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிப்புக்குள்ளான 350-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள், போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிப்பொருட்கள் அடங்கிய தொகுப்பினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கி, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத் துறையின் சார்பில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவக்குழுவினரால் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றதை பார்வையிட்டார்கள்.


மேலும், தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஃபெஞ்சல்‌ புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிப்புக்குள்ளான பொதுமக்களுக்கு அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமினை  மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.ஆர்.ராஜேந்திரன் அவர்கள் பார்வையிட்டு, 200-க்கும் மேற்பட்ட  குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள், போர்வை உள்ளிட்ட மழை நிவாரண உதவிப்பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்கள்.


முன்னதாக, தருமபுரி மாவட்டம், தருமபுரி நகராட்சிக்குட்பட்ட TNSTC நகர் சாலை பகுதி மற்றும் பிடமனேரி சாலை பகுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக தேங்கியுள்ள மழைநீர் தற்பொழுது மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.


இந்த ஆய்வுகளின் போது, வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, முன்னாள் அமைச்சர் முனைவர்.பி.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. தடங்கம் பெ. சுப்பிரமணி, திரு.மனோகரன், தருமபுரி நகர்மன்றத் தலைவர் திருமதி. மா. இலட்சுமி, நகராட்சி ஆணையாளர் திரு.சேகர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies