Type Here to Get Search Results !

போர்க்கால அடிப்படையில் உடனடியாக மலை கிராம மக்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் மலைநாடு மக்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் பெருமாள் அறிக்கை.


போர்க்கால அடிப்படையில் உடனடியாக மலை கிராம மக்களுக்கு  நடவடிக்கை எடுக்க வேண்டும் மலைநாடு மக்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் பெருமாள் அறிக்கை.


கடந்த நவம்பர் மாதம் 28 முதல் தற்போது வரை ஃபெஞ்சல் புயல் ஏற்பட்டு தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்ஙப்பட்டுள்ளது, குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சேலம் மாவட்டம் தர்மபுரி மாவட்டம் டெல்டா மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயல் அதிகளவில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.


சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதி சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி தர்மபுரி மாவட்டம் சித்தேரி மற்றும் வாச்சாத்தி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மலைவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரூரில் இருந்து சித்தேரி செல்லும் சாலையில் பாறைகள் உருண்டும் புதிய அருவிகளால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் அமைந்துள்ள ஏரியில் நீர் நிரம்பிய நிலையில் அந்த பகுதியில் வெள்ளம் ஊருக்குள் வந்து கொண்டு இருக்கிறது.


சித்தேரி மற்றும் வாச்சாத்தி மற்றும் ஏற்காடு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக விவசாய பயிர்கள் மழை மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகள் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் பழங்குடியின மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். தமிழ்நாடு அரசு இதில் சிறப்பு கவணம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies