தருமபுரி மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் முழுவதும் வெளியேற்றப்படும் பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி தேர்வுநிலைப் பேரூராட்சி வார்டு எண்.15 தமாணிக்கோம்பை காலேஜ் ரோடு பகுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த மழையால் தேங்கியுள்ள மழைநீர் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் முழுவதும் வெளியேற்றப்பட்டது.
பாப்பிரெட்டிபட்டி தேர்வுநிலைப் பேரூராட்சி, வார்டு எண்.4 காந்தி நகர் குட்டைப் பகுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த மழையால் தேங்கியுள்ள மழைநீர் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் முழுவதும் வெளியேற்றப்பட்டது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், கோம்பேறி மிட்டாரெட்டிஅள்ளி சாலை பகுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக தேங்கியுள்ள மழைநீர் தற்பொழுது ஜே.சி.பி. இயந்திரம் மூலம் முழுவதும் வெளியேற்றப்பட்டது.
தருமபுரி மாவட்டம், தொப்பையாறு அணை நிரம்பியதால் தண்ணீர் திறக்கப்பட போது, தம்மம்பட்டி ஊராட்சி முதல் வெள்ளாறு வரை உள்ள தரைபாலத்தினை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், சாமியாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேங்கியுள்ள மழைநீர் தற்பொழுது தீயணைப்பு துறை உதவியுடன் அகற்றப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், வத்தல்மலை அடிவாரத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருதோடு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தற்காலிக சாலை அமைத்து தரப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் உத்தரவின்படி, தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கூடுதல் ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதல் படி, பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொம்மிடி ஊராட்சியில் கோட்டைமேடு வழியாக மோரூர் செல்லும் சாலையில் உள்ள தரை பாலம் புயல் மழை காரணமாக பழுது ஏற்பட்டு துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து, அதனை தற்பொழுது ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் உதவி பொறியாளர் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் முன்னிலையில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த மழையால் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் அப்புறப்படுத்தப்படும் பணிகளும், சாலை சீரமைப்பு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு, இப்பணிகள் முடிந்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.