நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக வெங்கடேஷ்பாபு, முத்துகுமரன், சரவணன், மண்டல முன்னாள் தலைவர் வெங்கடசுப்ரமணியம், மண்டல துணைத்தலைவர் சுப்பிரமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக JCI மண்டல தலைவர் JFM கலந்துகொண்டார், நடைபெற்ற நிகழ்வில் 2025ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பொறுபெற்றுக்கொண்டனர், இதில் தலைவராக பாபு அவர்களும், செயலாளராக கணேஷ் அவர்களும், பொருளாளராக பிரசாந்த் அவர்களும் பொறுபெற்றுக்கொண்டனர்.
துணை தலைவர்களாக நிரோசா (மேலாண்மை துறை), சிவகுமார் (பயிற்சி), நந்தகுமார் (சமூக முன்னேற்றம்), செம்மலை (வணிகம்), மதனகோபால் (வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்), வினோத்குமார் (மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரம்), ஞானசேகரன் (சர்வதேசம்) ஆகியோர் பொறுப்பேற்றனர்.
துறை இயக்குனர்களாக பிரசன்னா (மேலாண்மை துறை), சுரேஷ் (பயிற்சி), யுவராணி (சமூக முன்னேற்றம்), கோகுல் பிரசாந்த் (வணிகம்), சென்னையன் (வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்), வினோத்குமார் (மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரம்), அருண்குமார் (சர்வதேசம்) ஆகியோர் பொறுப்பேற்றனர்.
இந்த நிகழ்வில், JCI பெண்கள் பிரிவு தலைவி அர்ச்சனா, இளம் JCI பெண்கள் பிரிவு தலைவர் திவ்யா, இளம் JCI தலைவர் மோஹித், ஸ்ரீனிவாசன், கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ரவிக்குமார், விஜயகுமார், ஜஸோ ஆகியோர் செய்திருந்தனர்.