அதன்படி குடியிருப்பு கட்டணத்தை பொறுத்தவரை ஏற்கனவே உள்ள வகைப்பாடு அடிப்படையில் நகர் பகுதியை ஒட்டிள்ள கிராம ஊராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.25, இதர ஊராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.15 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வர்த்தக கட்டிடங்களை பொறுத்தவரை நகர் பகுதியை ஒட்டிள்ள கிராம ஊராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.30, இதர ஊராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை கல்வி நிறுவனம் ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டிடங்களை பொறுத்தவரை நகர் பகுதியை ஒட்டிள்ள கிராம ஊராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.40, இதர ஊராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.24 கட்டணமாகும். அதே மனை பிரிவை பொறுத்தவரை குடியிருப்பு மனை பிரிவாக இருந்தால் ஒரு மனைக்கான அனுமதி கட்டணம் ரூ.1000 மற்றும் நகர் பகுதியை ஒட்டிள்ள கிராம ஊராட்சிகளில் சதுரடிக்கு ரூ.3 முதல் ரூ.4.00 வரை, இதர ஊராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.1 முதல் ரூ.2 வரை கட்டணமாகும்.
தொழிற்சாலைக்கான மனையாக இருந்தால் ஒரு மனைக்கு ரூ.10000 அனுமதி கட்டணமாக செலுத்த வேண்டும். நகர் பகுதியை ஒட்டிள்ள கிராம ஊராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.4.50 முதல் ரூ.6.00 வரை, இதர ஊராட்சிகளில் சதுரடிக்கு ரூ.1.50 முதல் ரூ.3.00 வரை கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஊராட்சி நிர்வாகங்கள் தீர்மானம் மூலம் இந்த கட்டணங்களுக்குள் தங்கள் ஊராட்சிகளில் கட்டணம் நிர்ணையிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளுக்குட்பட்ட மக்கள் மேற்காணும் அரசாணையில் தெரிவித்துள்ளவாறு சுயசான்று (Self Certification) இணையவழி மூலமாகவே எளிய முறையில் அனுமதி பெற்று கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

