இந்திய அரசு அமைப்பு சட்டத்தை வடிவமைத்த சட்ட மேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை கண்டித்து. தர்மபுரி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தர்மபுரி நகர செயலாளர் நாட்டான் மாது தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு திமுகவின் மாவட்ட பொருளாளர் தங்கமணி, தர்மபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, தர்மபுரி ஒன்றிய செயலாளர் காவேரி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சண்முகம், வைகுண்டம், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் பெரியண்ணன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் இளைய சங்கர், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் அசோக்குமார், முத்தமிழ், கலைச்செல்வன், நகர் மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன், முல்லைவேந்தன், சூரியநாதன், பாலசுப்பிரமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் ராஜா, ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

.jpg)