தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி வனப்பகுதியை ஒட்டிய கிராமமாகும். இங்கு விவசாயம் மற்றும் ஆடு, மாடுகள் மேய்தல் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு வளர்க்கப்படும் மாடுகள் விவசாய பணிகளுக்கு போக மீதி நேரங்களில் அருகில் உள்ள வனப்பகுதிக்கு மேச்சலுக்கு சென்று விடும். பின்னர் மாடுகள் மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்து விடும்.அங்குள்ள பட்டியில் அடைக்கப்படும்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கே. குள்ளாத்திரம்பட்டியை சேர்ந்த ரவி வயது 55 என்பவருடைய 2 மாடுகள்மற்றும் கூத்தப்பாடியை சேர்ந்த எல்லப்பன் வயது 37 என்பதற்குச் சொந்தமான 1மாடுஎன மொத்தம் 3 மாடுகள் விவசாய நிலத்தில் மர்மமான முறையில் செத்து கிடத்தது. இது தொடர்பாக மாட்டின் உரிமையாளர்கள் ஒகேனக்கல் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கால்நடை மருத்துவர் முன்னிலையில் மாடுகள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் மாட்டின் உரிமையாளர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அடக்க செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

.jpg)