பின்னர் சிகிச்சை முடித்து அங்கிருந்து வீடு திரும்பும் போது கிழக்கு ஏமனூர் அருகே ஒட்ட பள்ளம் என்ற இடத்தில் வனத்துறையினர் மயில்சாமியை கைது செய்து வனத்துறையினரின் வாகனத்தில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அம்சாவை கீழே தாக்கி கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அம்சா பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அம்சாவை தாக்கிய வனத்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஏரியூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகரன் ஊர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

.jpg)