தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி, சின்னாறு அணை அருகே பஞ்சப்பள்ளி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்பட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஓரே மோட்டார் சைக்கிளில் இரண்டு இளைஞர்கள் வந்து கொண்டிருந்தனர், அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது மஞ்ச பையில் மறைத்து வைத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரை கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது,
அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த சப்பானிபட்டியை சேர்ந்த பெயிண்டர் ஹரிஸ் (வயது. 21) மற்றும் காவேரி பட்டணம் அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்த கல்லூரிமாணவர் மகேஷ் (வயது. 21) என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

