தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், காரிமங்கலம் போலீசார், பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, இராமசாமி கோயில் , அனுமந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காரிமங்கலம் கடைவீதி மற்றும் அனுமந்தபுரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருந்த 2 நபர்களை பிடித்து விசாரனை செய்ததில் காரிமங்கலம் அடுத்த சொன்னம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் (வயது.37), காரிமங்கலம் அம்பேத்கார் நகரை சேர்ந்த ராஜேந்திரன் (வயது .42) என்பதும் சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளையும், 3400 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.