தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த குல்லிலிகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் கார்த்திக் (வயது-27) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கூலி வேலை செய்து வந்தார். இவர் குடிப்பழக்கத்திற்க்கு அடிமையானதால் திருமனம் செய்ய பெண் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மேலும் மனவேதனையில் காணப்பட்ட கார்த்திக் நேற்று முன்தினம் 29ம் தேதி இரவு குடிபோதையில் வீட்டிற்க்கு வந்தவர் நள்ளிரவு மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் வியாழக்கிழமை இன்று மாலை 6 மணிக்கு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக