தர்மபுரி மாவட்டம், மதிகோன் பாளையம் அடுத்த எஸ். கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி துரைராஜி என்பவரின் மகன் கோகுல் அரசன் (வயது .19) இவர் 30ம் தேதி நேற்று காலை 10 மணிக்கு மோட்டார் சைக்கிளில் தனது அக்கா வீட்டிற்க்கு செல்வதற்காக ஓடசல்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்,
வைரவள்ளி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் கோகுல்அரசன் பலத்த காயமடைந்தார், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து வியாழக்கிழமை இன்று மாலை 6 மணிக்கு கோகுல் அரசன் கொடுத்த புகாரின் பேரில் மதிகோன் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக