கேந்திரமங்கலம் அடுத்த பிக்கனஅள்ளியில் வாலிபர் வெட்டி கொலை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 நவம்பர், 2024

கேந்திரமங்கலம் அடுத்த பிக்கனஅள்ளியில் வாலிபர் வெட்டி கொலை.


தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அடுத்த பிக்கனஅள்ளி கிராமத்தில் நள்ளிரவில் கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக மகேந்திரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள சமத்துவபுரம் கிராமத்தை சேர்ந்த அசோக்குமார் என்கின்ற வேலவன் (37) என்பதும், இவர் பெங்களூரில் சென்ட்ரிங் வேலை செய்து வந்துள்ளதும் தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகி சுகன்யா என்ற மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad