Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

ஓய்வூதியா்கள் அஞ்சலகங்களில் உயிா்வாழ் சான்றிதழை ஒப்படைக்க வாய்ப்பு.


ஓய்வூதியா்கள் அஞ்சலகங்களில் உயிா்வாழ் சான்றிதழை ஒப்படைக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் தங்கள் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் சமர்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் "இந்தியா போஸ்ட்பேமென்ட்ஸ் வங்கி". ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்த படியே தபால்காரர்கள் மூலம் பயோமெட்ரிக் அல்லது FACE RD App முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.


இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண். PPO எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல்ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். இந்த டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ளலாம்.


மேலும் https://cc.cept.gov.in/ServiceRequest/request.aspx என்ற இணையதள முகவரி மூலம் அல்லது "Postinfo" செயலியை பதிவிறக்கம் செய்து ஓய்வூதியதாரர்கள் தங்களின் சேவை கோரிக்கையை ஆன்லைனில் பதிவு செய்யலாம். அந்தந்த பகுதி தபல்கரர்கள் மூலம் வீட்டிற்கே வந்து சேவை வழங்கப்படும். இந்த சேவையை வழங்க அனைத்து அஞ்சலகங்களிலும் நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


மத்திய அரசு ஓய்வூதியதாரா்கள் மட்டுமின்றி தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் மூலம் ஓய்வூதியம் பெறுபவா்கள், மாநில அரசு ஓய்வூதியதாரா்கள், ராணுவ ஓய்வூதியதாரா்கள், இதர ஓய்வூதியதாரா்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பித்து பயன்பெறலாம், எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்பிக்க தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies